​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
குடியுரிமை திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Published : Dec 04, 2019 7:44 PM

குடியுரிமை திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Dec 04, 2019 7:44 PM

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.

அண்டை நாடுகளில் இருந்து அகதிகளாக குடியேறிய இந்துகள், பெளத்த மதத்தினர், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள் உள்ளிட்ட மத சிறுபான்மையினருக்கு குடியுரிமை அளிக்க ஏதுவாக உருவாக்கப்பட்ட சட்டத் திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

அகதிகள் இந்தியாவில் 12 ஆண்டுகள் வசித்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையை 7 ஆண்டுகளாக குறைத்து, சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இதேபோல் நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டசபைகளில் இட ஒதுக்கீட்டை மேலும் 10 ஆண்டுகளுக்கு நீட்டிக்கும் சட்ட திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.

இதற்காக அரசியலமைப்புப் பிரிவு 334 ஐ திருத்த முடிவு செய்யப்பட்டது. தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருடன் சேர்ந்து ஆங்கிலோ இந்தியர்களுக்கும் இட ஒதுக்கீட்டை நீட்டிக்க இந்த மசோதா வகை செய்கிறது.