​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இரு சக்கர வாகன விபத்துகள் - சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்

Published : Dec 04, 2019 6:23 PM

இரு சக்கர வாகன விபத்துகள் - சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்

Dec 04, 2019 6:23 PM

இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் மரணமடைய ஹெல்மெட் அணியாதது மட்டுமே காரணமல்ல, மோசமான சாலைகளும் ஒரு காரணம் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கட்டாய ஹெல்மெட் சட்டத்தை கண்டிப்புடன் அமல் படுத்த கோரிய வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, காவல்துறை சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், நடப்பு ஆண்டில் சென்னை தவிர பிற மாவட்டங்களில் ஹெல்மெட் அணியாமல் சென்று விபத்துக்குள்ளாகி 3,535 பேர் பலியாகியானதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை பதிவு செய்த நீதிபதிகள், இருசக்கர வாகன ஓட்டிகள் பலியாவதற்கு ஹெல்மெட் அணியாதது மட்டுமே காரணமல்ல என்றும், சாலையின் தரமும், முறையாக பராமரிக்காததும் காரணம் எனத் தெரிவித்தனர். கூடுதல் அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஜனவரி 9 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.