​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வாகன சோதனையில் சிக்கிய தங்கத்தை போலீசார் பங்கிட்டதாக புகார்

Published : Dec 04, 2019 5:02 PM



வாகன சோதனையில் சிக்கிய தங்கத்தை போலீசார் பங்கிட்டதாக புகார்

Dec 04, 2019 5:02 PM

திருச்சி லலிதா ஜூவல்லரி கொள்ளை தொடர்பாக, வாகன சோதனையின் போது பறிமுதல் செய்யப்பட்ட ஒரு கிலோ தங்கத்தை போலீசார் பங்கிட்டுக்கொண்டதாக கொள்ளையன் சுரேஷ் புகார் தெரிவித்துள்ளான்.

ஒரு கொள்ளை வழக்கு விசாரணைக்காக அவனை மதுரை அழைத்து சென்ற போலீசார், இன்று மீண்டும் திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து வந்தனர்.

அப்போது பேசிய சுரேஷ், தனது கூட்டாளி மணிகண்டனிடம் திருவாரூர் சோதனைச் சாவடியில் ஐந்தே முக்கால் கிலோ தங்கத்தை போலீசார் பறிமுதல் செய்ததாகவும், அதில் நாலே முக்கால் கிலோ தங்கத்தை மட்டும் கணக்கில் காட்டியதாகவும் கூறினான்.

இதனிடையே மற்றொரு கொள்ளையனான முருகனை திருவாரூருக்கு அழைத்துச் சென்ற போலீசார், அவனது உறவினர்களிடம் 405 கிராம் நகைகளையும், திருவெறும்பூர் காவிரி ஆற்றங்கரையில் புதைத்து வைத்திருந்த ஒன்றரை கிலோ தங்க நகைகளையும் தோண்டி எடுத்தனர்.

பின்னர் அவன் வரும்,16 ம் தேதி வரை காவல் நீடிப்பு செய்யப்பட்டு, பெங்களூர் நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லப்பட்டான்.