​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பச்சை நிறத்தில் காணப்படும் மேட்டூர் அணை நீர்

Published : Dec 04, 2019 3:42 PM



பச்சை நிறத்தில் காணப்படும் மேட்டூர் அணை நீர்

Dec 04, 2019 3:42 PM

சேலம் மேட்டூர் அணை நிரம்பிய நிலையில் 16 கண் மதகுகள் அருகே பச்சை நிறத்தில் நீர் காணப்படுவதுடன் மீன்கள் செத்து மிதப்பதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழையால் மேட்டூர் அணை நடப்பாண்டில் நான்காவது முறையாக நிரம்பியது. அணையின் 16 கண் மதகுகள் அருகே இருக்கும் நீர் அடர் பச்சை நிறத்தில் காணப்படுகிறது.

image

அங்கிருந்து வெளியேறும் தண்ணீரானது மதகுகளின் அருகே தேங்கியிருக்கும் குட்டைகளில் சென்று கலக்கிறது. இதனால் அங்கு துர்நாற்றம் வீசுவதுடன் ஏராளமான மீன்கள் செத்து மிதக்கின்றன.

image

இது குறித்து மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து நீர் மாசுக்கான காரணத்தை கண்டறிய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.