​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ரஜினியின் அடுத்த படத்திற்கு ஜோடியாக நடிகை மீனா?

Published : Dec 04, 2019 1:03 PM



ரஜினியின் அடுத்த படத்திற்கு ஜோடியாக நடிகை மீனா?

Dec 04, 2019 1:03 PM

தர்பாரைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள அடுத்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை மீனா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் தர்பார் படத்துக்கு பிறகு சிறுத்தை சிவா இயக்கவுள்ள படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். இதில் நடிக்கவுள்ள பிற நடிகர்களுக்கான தேர்வு மும்முரமாக நடைபெற்றுவருகிறது.

இந்நிலையில், புதிய படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க நடிகை மீனா ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முத்து, வீரா, எஜமான் உள்ளிட்ட படங்களில் இருவரும் ஏற்கெனவே இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.