​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
போலீஸ் பேஸ்புக் பக்கத்தில் அவதூறு கருத்துகளை பதிவு செய்த பொறியாளர் கைது

Published : Dec 04, 2019 12:45 PM



போலீஸ் பேஸ்புக் பக்கத்தில் அவதூறு கருத்துகளை பதிவு செய்த பொறியாளர் கைது

Dec 04, 2019 12:45 PM

கன்னியாகுமரி மாவட்ட காவல் துறையின் பேஸ்புக் பக்கத்தில் தொடர்ந்து அவதூறு கருத்துகளை பதிவிட்டு வந்ததோடு அதனை முடக்கியதில் தொடர்புடைய பொறியாளர் கைது செய்யப்பட்டார்.

அந்த பேஸ்புக் பக்கத்தில் சாலை விழிப்புணர்வு மற்றும் குற்றச் சம்பவங்கள் தொடர்பான அறிவுரைகளை போலீசார் பதிவு செய்து வருகின்றனர். இப்பதிவுகளின் கமெண்ட் செக் ஷனில் குறிப்பிட்ட போலி அக்கவுண்ட்கள் மூலம் சிலர் போலீசார் குறித்து அவதூறான கருத்துகளை பதிவு செய்து வந்தனர். மேலும் அண்மையில் முடக்கப்பட்ட பேஸ்புக் பக்கம் மீட்டெடுக்கப்பட்டது.

விசாரணையில் தக்கலையை அடுத்த கோடியூரை சேர்ந்த ஜெரூன், வினீஸ், பிரைட் சிங் மற்றும் மார்சியன் ஆகியோர் இதனை செய்தது தெரியவந்தது. குவைத்தில் பொறியாளாராக வேலை செய்யும் இவர்களில் ஒருவரான ஜெரூன் என்பவர் ஊருக்கு வந்த நிலையில் கைது செய்யப்பட்டார்.  மற்றவர்களை பிடிக்க விமான நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் போலீஸ் தரப்பில் வழங்கப்பட்டுள்ளது.