​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அடுத்த 48 மணி நேரத்திற்கு கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு

Published : Dec 04, 2019 12:15 PM

அடுத்த 48 மணி நேரத்திற்கு கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு

Dec 04, 2019 12:15 PM

தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்திற்கு ஒரு சில இடங்களில் லேசான மழையும், நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிதமான மழையும் பொழிய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன், கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் 5 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளதாக தெரிவித்தார்.

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு அதிக மழை பெய்ய வாய்ப்பில்லை எனவும் குறிப்பிட்டார். சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் குமரிகடலுக்கு 2 நாட்களுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் புவியரசன் கேட்டுக் கொண்டார்.

சென்னையை பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய கூடும், மேலும் சென்னைக்கு இந்த பருவகாலத்தில் கிடைக்க வேண்டிய அளவில் 14 செண்டி மீட்டர் மழை பொழிய வேண்டி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கடந்த 24 மணி நேரத்தில் ஒரு அதிகபட்சமாக நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் 5 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளதாகவும், சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அடுத்த இரண்டு நாட்களுக்கு குமரிக்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.