​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சாலையோரம் கிடக்கும் கரும்புகளுக்காக சுற்றித்திரியும் யானைகள்

Published : Dec 04, 2019 11:07 AM

சாலையோரம் கிடக்கும் கரும்புகளுக்காக சுற்றித்திரியும் யானைகள்

Dec 04, 2019 11:07 AM

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையோரம் சிதறிக்கிடக்கும் கரும்பு துண்டுகளை உண்பதற்காக யானைக்கூட்டம் சுற்றித்திரிவதால் வாகன ஓட்டிகள் கவனமுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக கர்நாடகாவில் இருந்து கரும்பு ஏற்றி வரும் லாரிகளில் இருந்து கரும்புகள் கீழே விழுந்துள்ளன.

சாலையோரம் சிதறிக்கிடக்கும் கரும்புகளை தின்பதற்காக வனப்பகுதியில் இருந்து யானைக்கூட்டம் படையெடுத்துள்ளன. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கவனமுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.