​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
2020-ல் பயன்பாட்டிற்கு வரும் உலகின் பெரிய கிரிக்கெட் மைதானம்

Published : Dec 04, 2019 7:16 AM

2020-ல் பயன்பாட்டிற்கு வரும் உலகின் பெரிய கிரிக்கெட் மைதானம்

Dec 04, 2019 7:16 AM

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தை பிரம்மாண்ட திறப்ப விழாவுடன், அடுத்த ஆண்டு துவக்கத்தில் பயன்பாட்டிற்கு கொண்டு வர பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.

குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகரில் மறுகட்டமைப்பு செய்யப்பட்டு வரும் சர்தார் படேல் மைதானம், ஒரே நேரத்தில் ஒரு லட்சத்து பத்தாயிரம் பேர் அமரும் வகையில் தயார் செய்யப்பட்டு வருகிறது.

வேகமாக நடந்து வரும் இதன் பணிகள் அடுத்த ஆண்டு துவக்கத்திலேயே முடிவடைய வாய்ப்பு இருப்பதாகவும், ஐசிசியின் அனுமதி கிடைக்கும் பட்சத்தில் ஆசியா லெவன் மற்றும் வோல்ட் லெவன் அணிகளுக்கு இடையேயான காட்சி போட்டியை முதல் போட்டியாக நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.