​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சிறு, குறு நிறுவனங்களுக்கு கடந்த 2 மாதங்களில் ரூ.4.91 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சகம் தகவல்

Published : Dec 03, 2019 8:26 PM

சிறு, குறு நிறுவனங்களுக்கு கடந்த 2 மாதங்களில் ரூ.4.91 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சகம் தகவல்

Dec 03, 2019 8:26 PM

சிறு, குறு நிறுவனங்கள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள், விவசாயிகளுக்கு கடந்த 2 மாதங்களில் 4 லட்சத்து 91 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்கி உள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பணப்புழக்கம் மற்றும் வேலைவாய்ப்பு அதிகரிக்கும் விதத்தில் கடந்த அக்டோபர் மாதம் நாடு முழுவதும் 374 மாவட்டங்களில் கடன் மேளா நடத்தப்பட்டது. அதன் மூலம் 2 லட்சத்து 52 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போன்று கடந்த நவம்பர் மாதம் பொதுத்துறை வங்கிகள் மூலம் 2 லட்சத்து 39 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. அதில் சிறு குறு நிறுவனங்களுக்கு மட்டும் மொத்தம் 72 ஆயிரத்து 985 கோடி ரூபாயும், வங்கிசாரா நிதி நிறுவனங்களுக்கு 45,153 கோடி ரூபாயும் கடன் வழங்கப்பட்டுள்ளது.