​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தமிழகத்தில் புதிதாக துவங்கப்படும் மருத்துவக்கல்லூரிகளுக்கு நிதி ஒதுக்கீடு

Published : Dec 03, 2019 7:35 PM

தமிழகத்தில் புதிதாக துவங்கப்படும் மருத்துவக்கல்லூரிகளுக்கு நிதி ஒதுக்கீடு

Dec 03, 2019 7:35 PM

தமிழகத்தில் புதிதாக தொடங்கப்படவுள்ள 6 மருத்துவக்கல்லூரிகளுக்கு முதல் கட்டமாக 137கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு விடுத்துள்ள உத்தரவில், தமிழகத்தில் அரசு மருத்துவக்கல்லூரிகள் இல்லாத பகுதிகளில் 9 புதிய மருத்துவக்கல்லூரிகள் துவங்க  அனுமதி வழங்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதில் விருதுநகர், ராமநாதபுரம், திண்டுக்கல், நாமக்கல், திருப்பூர் மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் அமைக்கப்படவுள்ள 6 மருத்துவக் கல்லூரிகளுக்கு மத்திய அரசின் பங்கான 1170 கோடி ரூபாயில் முதல் கட்டமாக 137கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக அரசாணையையும் மத்திய அரசு வெளியிட்டுள்ளது.