​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
காவல் ஆணையரகத்துக்கு வரும் மாற்றுத் திறனாளிகளுக்கு கூடுதல் சக்கர நாற்காலிகள் ஏற்பாடு செய்ய கோரிக்கை

Published : Dec 03, 2019 4:08 PM

காவல் ஆணையரகத்துக்கு வரும் மாற்றுத் திறனாளிகளுக்கு கூடுதல் சக்கர நாற்காலிகள் ஏற்பாடு செய்ய கோரிக்கை

Dec 03, 2019 4:08 PM

சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்துக்கு புகார் அளிக்க வரும் மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்த கூடுதல் சக்கர நாற்காலிகளை ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

வேப்பேரியில் உள்ள காவல் ஆணையரகத்திற்கு நாள்தோறும் மாற்றுத் திறனாளிகள் கணிசமாக எண்ணிக்கையில் வருகின்றனர். நுழைவு வாயிலில் வாகனங்களை விட்டுவிட்டு அலுவலகம் வரை நடந்து செல்ல வேண்டிய சூழல் உள்ள நிலையில், மாற்றுத் திறனாளிகளுக்கு என ஒரேயொரு சக்கர நாற்காலி மட்டுமே உள்ளதாகக் கூறப்படுகிறது.

அதற்காக நெடுநேரம் காத்திருக்க வேண்டிய நிலை இருப்பதாகக் கூறப்படும் நிலையில், சிலரை அவர்களது உறவினர்கள் தூக்கிச் செல்லும் நிலையும் உள்ளதாகக் கூறப்படுகிறது.