​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சர்க்கரை அட்டையிலிருந்து அரிசி அட்டைக்கு மாறிய பயனாளிகளுக்கு கூடுதலாக அரிசி வழங்க ரூ. 604 கோடி நிதி ஒதுக்கி அரசாணை

Published : Dec 03, 2019 2:59 PM

சர்க்கரை அட்டையிலிருந்து அரிசி அட்டைக்கு மாறிய பயனாளிகளுக்கு கூடுதலாக அரிசி வழங்க ரூ. 604 கோடி நிதி ஒதுக்கி அரசாணை

Dec 03, 2019 2:59 PM

சர்க்கரை அட்டையிலிருந்து அரிசி அட்டைக்கு மாறிய பயனாளிகளுக்கு கூடுதலாக அரிசி வழங்க 604 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள சர்க்கரை குடும்ப அட்டைகளை தகுதியின் அடிப்படையிலும் விருப்பத்தின் அடிப்படையிலும் அரிசி அட்டைகளாக மாற்றிக் கொள்ள அரசு அனுமதி வழங்கியது. இதற்கான விண்ணப்பிக்க கடந்த மாதம் 29ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டு, 4.50 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இதற்காக மாதம் ஒன்றுக்கு 20 ஆயிரம் மெட்ரிக் டன் அளவுக்கு கூடுதலாக அரிசி தேவைப்படும் எனவும் ஆண்டு ஒன்றுக்கு 604 கோடியே 96 லட்சம் ரூபாய் செலவாகும் என்றும் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையாளர் சார்பில் அரசிடம் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்று தமிழக அரசாணை பிறப்பித்துள்ளது.