​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
புதிய மருத்துவக் கல்லூரியை மயிலாடுதுறையில் அமைக்க வலியுறுத்தி கடை அடைப்பு போராட்டம்

Published : Dec 03, 2019 1:22 PM

புதிய மருத்துவக் கல்லூரியை மயிலாடுதுறையில் அமைக்க வலியுறுத்தி கடை அடைப்பு போராட்டம்

Dec 03, 2019 1:22 PM

நாகை மாவட்டத்தில் அமையவிருக்கும் அரசு மருத்துவக்கல்லூரியை மயிலாடுதுறையில் அமைக்க வலியுறுத்தி கடை அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே நாகையில் இருந்து சிறிது தொலைவில் திருவாரூர் மற்றும் காரைக்காலில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இருப்பதாக கூறியுள்ள மயிலாடுதுறை பகுதி வியாபாரிகள், அரசு புதிதாக அமைக்கும் மருத்துவக் கல்லூரிகளை தங்கள் பகுதியில் அமைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.

இதற்காக மயிலாடுதுறை கோட்டத்தில் 12 ஆயிரம் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. அரசு மருத்துவக் கல்லூரியை மயிலாடுதுறையில் அமைக்க கோரி சீர்காழி,தென்பாதியில் பகுதிகளிலும் 5 ஆயிரம் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.