​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கணவர் மீது சின்னத்திரை நடிகை ஜெயஸ்ரீ புகார்

Published : Dec 03, 2019 1:20 PM



கணவர் மீது சின்னத்திரை நடிகை ஜெயஸ்ரீ புகார்

Dec 03, 2019 1:20 PM

தன்னிடம் இருந்து நகை பணத்தை அபகரித்துக் கொண்டதுடன் தனது மகளையும் தனது கணவர் ஈஸ்வர் சித்ரவதை செய்ததாக நடிகை ஜெயஸ்ரீ கூறியுள்ளார்.

கணவருக்கு எதிராக புகார் கொடுத்ததை தொடர்ந்து தனக்கு மிரட்டல்கள் வருவதாக, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அவர் புகார் அளித்துள்ளார்.

பின்னர் பேசிய ஜெயஸ்ரீ, குழந்தையுடன் தனியாக வசித்து வந்த தன்னை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட ஈஸ்வர் , சில நாட்களில் குடித்துவிட்டு வந்து கொடுமைப்படுத்தி வந்ததாக கூறியுள்ளார்.

தனது கணவருக்கு மற்றொரு நடிகையுடன் தகாத உறவு இருப்பதை ஆறு மாதங்களுக்கு முன்னர், தான் கண்டுபிடித்ததாகவும் அப்போது முதல், கணவரின் சித்ரவதை எல்லை மீறிச் சென்றதாகவும் ஜெயஸ்ரீ தெரிவித்துள்ளார். தனது கணவருடன் தகாத உறவில் இருக்கும் நடிகை தரப்பில் இருந்தும் தனக்கு மிரட்டல்கள் வருவதாக ஜெயஸ்ரீ கூறியுள்ளார்.