​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அண்ணா பல்கலைக்கழகத்தின் 40ஆவது பட்டமளிப்பு விழா

Published : Dec 03, 2019 12:19 PM



அண்ணா பல்கலைக்கழகத்தின் 40ஆவது பட்டமளிப்பு விழா

Dec 03, 2019 12:19 PM

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் 40 வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக கலையரங்கில் நடைபெற்ற விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விழாவில், ஆய்வினை முடித்த 703 மாணவர்கள் 477 மாணவிகள் என மொத்தம் 1180 பேர் முனைவர் பட்டம் பெற்றனர். இளநிலை பொறியியல் பாட பிரிவுகளில் முதல் மதிப்பெண் பெற்ற 39 மாணவிகள் உட்பட 71 பேருக்கு தங்க பதக்கமும் வழங்கப்பட்து. இந்த ஆண்டு இளங்கலை பொறியியல் பட்டம் முடித்த ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 418 மாணவ, மாணவிகளும் தங்களது பட்டங்களை பெறுகின்றனர்.