​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
முப்படை தளபதி பதவிக்கான பொறுப்புகள், பணிகளுக்கான இறுதி வடிவம்

Published : Dec 03, 2019 8:30 AM

முப்படை தளபதி பதவிக்கான பொறுப்புகள், பணிகளுக்கான இறுதி வடிவம்

Dec 03, 2019 8:30 AM

முப்படை தளபதி பதவிக்கான பொறுப்புகளையும், பணிகளையும் இறுதி செய்வதற்காக நியமிக்கப்பட்ட தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமையிலான உயர்நிலைக் குழு தனது அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்துள்ளது.

இதுதொடர்பாக மாநிலங்களவையில் பேசிய பாதுகாப்புத் துறை இணையமைச்சர் ஸ்ரீபாத் நாயக்,முப்படை தளபதி பதவி தகவல் அறியும் உரிமைச் சட்ட வரம்புக்குள் கொண்டு வரப்படும் என்றார். இதற்கிடையில் முப்படை தளபதி பதவிக்கான நியமனத்தை இன்னும் இரு வாரங்களில் மத்திய அரசு அறிவிக்க வாய்ப்புள்ளது என்று  தகவலறிந்த வட்டாரங்கள் கூறின.