​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சிறந்த மேலாண்மை செயல்பாட்டுக்காக தமிழக காவல்துறைக்கு ஸ்கோச் விருது

Published : Dec 02, 2019 3:57 PM



சிறந்த மேலாண்மை செயல்பாட்டுக்காக தமிழக காவல்துறைக்கு ஸ்கோச் விருது

Dec 02, 2019 3:57 PM

சிறந்த நிர்வாக மேலாண்மை செயல்பாட்டிற்காக பல்வேறு பிரிவுகளில் விருது வென்ற தமிழக காவல்துறையினர், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தலைமை செயலகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

ஸ்கோச் எனப்படும் இந்த விருது, சிவில் சப்ளை சிஐடி பிரிவு டிஜிபியான பிரதீப் வி பிலீப்புக்கு டெல்லியில் அண்மையில் வழங்கப்பட்டது. அவர் உருவாக்கிய, “சமுதாய காவல் - காவல்துறை நண்பர்கள்” உள்ளிட்ட திட்டங்களை பாராட்டி இந்த விருது வழங்கப்பட்டது.

அதேபோல, அடையாளம் தெரியாமல் இறந்தவர்களை ஒப்பீடு செய்து அடையாளம் காணும் செயலியை உருவாக்கியது, தூய்மையான காவல்நிலைய பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளிலும் தமிழக காவல்துறை விருது வென்றது.

இந்நிலையில் காவல்துறை தலைமை இயக்குநர் திரிபாதி, சென்னை காவல் ஆணையாளர் ஏ.கே. விஸ்வநாதன், சிவில் சப்ளை சிஐடி பிரிவு டிஜிபி பிரதீப் வி பிலீப் உள்ளிட்ட பலர் முதலமைச்சரிடம் ஸ்கோச் விருதுகளை காண்பித்து வாழ்த்து பெற்றனர்.