​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
குரூப்-2 தேர்விற்கான கலந்தாய்வு விரைவில் அறிவிக்கப்படும் என தகவல்

Published : Dec 02, 2019 1:01 PM



குரூப்-2 தேர்விற்கான கலந்தாய்வு விரைவில் அறிவிக்கப்படும் என தகவல்

Dec 02, 2019 1:01 PM

டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான கலந்தாய்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பல்வேறு துறைகளில்  காலியாக உள்ள ஆயிரத்து 338 பணியிடங்களுக்கான அறிவிப்பு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியாகிய நிலையில் நடைபெற்ற முதல்நிலை தேர்வை 6 லட்சத்து 26 ஆயிரத்து 970 பேர் எழுதினர்.

அதில் வெற்றிப்பெற்றவர்களுக்கான முதன்மை தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது. அதையடுத்து  நவம்பர்  மாதம் நடத்தப்பட்ட நேர்முக தேர்வில்  2 ஆயிரத்து 667 பேர் பங்கேற்றனர்.

அவர்களின் தரவரிசைப்பட்டியல் நேற்று முன்தினம் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியானது. இதற்கிடையே நேர்முகத்தேர்வில் வெற்றிப்பெற்றவர்களுகான கலந்தாய்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று டிஎன்பிஎஸ்சி செயலாளர் நந்தகுமார் தெரிவித்துள்ளார்.