​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பெண் மருத்துவர் கொலை வழக்கை விசாரிக்க விரைவு நீதிமன்றம் - சந்திரசேகர ராவ்

Published : Dec 02, 2019 9:30 AM

பெண் மருத்துவர் கொலை வழக்கை விசாரிக்க விரைவு நீதிமன்றம் - சந்திரசேகர ராவ்

Dec 02, 2019 9:30 AM

தெலங்கானாவில் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட பெண் மருத்துவர் வழக்கை விரைந்து விசாரிக்க விரைவு நீதிமன்றம் அமைக்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்.

பெண் மருத்துவர் கொலை வழக்கு தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது விரைவான விசாரணை தொடர்பாக உயர்மட்ட அதிகாரிகள் கூட்டம் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தலைமையில் நடந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக நாடு முழுவதும் பெருகிவரும் எதிர்ப்பு மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு மரண தண்டனை வழங்குவது குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து வழக்கை விரைந்து விசாரித்து முடிவுக்கு கொண்டு வர விரைவு நீதிமன்றம் அமைக்க முதலமைச்சர் சந்திரசேகர ராவ் உத்தரவிட்டுள்ளார்.