​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கூகுளுக்கு பதிலாக DuckDuckGo-வுக்கு மாறிய Twitter நிறுவனர்

Published : Dec 01, 2019 5:15 PM

கூகுளுக்கு பதிலாக DuckDuckGo-வுக்கு மாறிய Twitter நிறுவனர்

Dec 01, 2019 5:15 PM

கூகுளுக்கு பதிலாக, டக்டக் கோ (DuckDuckGo) எனும் இணைய தேடுபொறித்தளத்தையே தான் பயன்படுத்திவருவதாக ட்விட்டர் நிறுவனர் ஜாக் தோர்சி (Jack Dorsey ) தெரிவித்துள்ளார்.

ட்விட்டரில் இதுகுறித்து தெரிவித்துள்ள அவர், டக் டக் கோ எனும் இணைய தேடுபொறித்தளம் பயன்படுத்த சிறப்பாக உள்ளதாகவும், தான் அதை மிகவும் விரும்பி உபயோகித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

டக் டக் கோ செயலியும்கூட பயன்படுத்த சிறப்பாக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 2008ஆம் ஆண்டு துவங்கப்பட்ட டக் டக் கோ தளத்தில், ஒருநாளைக்கு சராசரியாக சுமார் 5 கோடி தேடல்கள் வரை நடைபெறுகின்றன. முன்னணி நிறுவனமான கூகுளில், இந்த எண்ணிக்கை, சுமார் 350 கோடியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.