​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மீண்டும் ஒரு லட்சம் கோடியைத் தாண்டிய GST வரி வருவாய்

Published : Dec 01, 2019 4:27 PM

மீண்டும் ஒரு லட்சம் கோடியைத் தாண்டிய GST வரி வருவாய்

Dec 01, 2019 4:27 PM

ஜிஎஸ்டி வரி வருவாய், கடந்த நவம்பரில் மீண்டும் ஒரு லட்சம் கோடியைத் தாண்டியுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஜிஎஸ்டி வருவாய் கடந்த செப்டம்பரில் சுமார் 91 ஆயிரம் கோடியாகவும், அக்டோபரில் சுமார் 95 ஆயிரம் கோடியாகவும் இருந்த நிலையில், தற்போது ஒரு லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது.

நவம்பர் மாத ஜிஎஸ்டி வருவாயில், மத்திய ஜிஎஸ்டியாக 19ஆயிரத்து 592 கோடி ரூபாயும், மாநில ஜிஎஸ்டியாக 27ஆயிரத்து 144 கோடி ரூபாயும் கிடைத்துள்ளது.

ஒருங்கிணைந்த ஜிஎஸ்டியாக 49 ஆயிரத்து 28 கோடி ரூபாயும், செஸ் வரியாக 7 ஆயிரத்து 727 கோடி ரூபாயும் கிடைத்துள்ளது.

ஜிஎஸ்டி அறிமுகம் செய்த பின்னர், அதிக வருவானம் கிடைத்த மாதங்களில் கடந்த நவம்பர் மாதம் 3ஆம் இடத்தில் உள்ளது. 2017 ஜூலைக்கு பிறகு ஜிஎஸ்டி வருவாய் ஒரு லட்சம் கோடி ரூபாயைத் தொடுவது இது எட்டாவது முறையாகும்.