​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
லண்டனில் தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு ஐ.எஸ்.பொறுப்பேற்பு

Published : Dec 01, 2019 8:37 AM

லண்டனில் தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு ஐ.எஸ்.பொறுப்பேற்பு

Dec 01, 2019 8:37 AM

லண்டனில் கத்தியால் குத்தி தீவிரவாதி தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு ஐ.எஸ். இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.

லண்டன் பாலத்தின் மீது நடந்து சென்றவர்களை கத்தியால் குத்தியும் துப்பாக்கியால் சுட்டும் காயப்படுத்திய 28 வயதான ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான். சுட்டுக் கொல்லப்பட்டவனின் பெயர் உஸ்மான் என்றும் போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். 2012ம் ஆண்டில் லண்டன் பங்குச்சந்தையில் குண்டு வைத்ததற்காக கைது செய்யப்பட்டான்.

பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீரில் தீவிரவாத முகாம் ஒன்றுடனும் அவன் தொடர்பு கொண்டிருந்தான். காஷ்மீரில் தாக்குதல் நடத்தவும் அவன் திட்டமிட்டிருந்தான். இத்தாக்குதலுக்கு பொறுப்பேற்ற ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் உஸ்மான் ஒரு போர்வீரன் அறிவித்துள்ளது.

இதனிடையே லண்டனில் பாலம் மீது தாக்குத் நடத்தப்பட்ட சில மணி நேரங்களில் அதே போன்றதொரு தாக்குதல் Grote Marktstraat எனும் சந்தையில் நடைபெற்றதில் 3 பேரை குத்தி காயம் செய்ததாக போலீசார் 35 வயதான இரண்டாவது தீவிரவாதியை கைது செய்துள்ளனர்.