​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தஞ்சை பெரியகோவில்: 2-ஆம் தேதி அன்று மூலவர் சன்னதிகள் மூடப்படுகின்றன

Published : Nov 30, 2019 6:13 PM

தஞ்சை பெரியகோவில்: 2-ஆம் தேதி அன்று மூலவர் சன்னதிகள் மூடப்படுகின்றன

Nov 30, 2019 6:13 PM

தஞ்சை பெரியகோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதையொட்டி 2-ந் தேதி முதல் மூலவர் சன்னதிகள் மூடப்படுகின்றன.

தஞ்சை பெரியகோவில் 23 ஆண்டுகளுக்கு பிறகு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 5-ந் தேதி கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு தஞ்சை பெரியகோவிலில் வருகிற 2-ந் தேதி பாலாலயம் நடக்கிறது.

பாலாலய பூஜை நேற்று காலை 8.30 மணிக்கு தொடங்கியது. இன்று காலை 8 மணிக்கு மூலமந்திர ஹோமத்துடன் கோவிலில் உள்ள அனைத்து சாமிகளுக்கும் ருத்ரா அபிஷேகம் நடைபெற்றது.

மாலை 5 மணிக்கு கும்பாலங்காரம் நடைபெற்று,முதல்கால யாகசாலை பூஜை தொடங்குகிறது.இதையடுத்து வருகிற 2-ஆம் தேதி கோவில்களில் உள்ள அனைத்து மூலவர் சன்னதிகளும் திரையிட்டு மூடப்படுகிறது. அதற்கு பதிலாக பெருவுடையார், பெரியநாயகி அம்மன் உலோக சிலைகள் சன்னதி முன் உள்ள மண்டபத்தில் இந்த சிலைகள் வைக்கப்படும். கும்பாபிஷேகம் முடியும் வரை இந்த சிலைகளுக்கு நாள்தோறும் பூஜைகள் செய்யப்படும்.