​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.5 சதவீதமாக சரிவு..!

Published : Nov 29, 2019 6:17 PM

மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.5 சதவீதமாக சரிவு..!

Nov 29, 2019 6:17 PM

ஜிடிபி எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி, செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த 2வது காலாண்டில் நான்கரை சதவீதமாக சரிவடைந்துள்ளது.

நடப்பு நிதி ஆண்டில் கடந்த ஜூன் மாதத்தில் ஜிடிபி 5 சதவீதமாக சரிவடைந்தது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத சரிவாக கூறப்பட்டது.

இந்த நிலையில் பொருளாதார நிபுணர்களின் கணிப்புக்கு ஏற்ப, ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான 2வது காலாண்டுக்கான ஜிடிபி நான்கரை சதவீதமாக சரிந்துள்ளது.

இந்திய பொருளாதாரம் மந்த நிலையில் இருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில், அதற்கு வலு சேர்க்கும் விதத்தில் இந்த புள்ளி விவரம் வெளியாகி இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ஜிடிபி வளர்ச்சி 7 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

அதே போன்று அக்டோபர் மாதத்தில் சிமெண்ட், நிலக்கரி, கச்சா எண்ணெய் உள்ளிட்ட 8 முக்கிய தொழில்துறை நிறுவனங்களின் வளர்ச்சி 5 புள்ளி 8 சதவீதமாக குறைந்துள்ளது.