​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சந்தனம், ஜவ்வாது மணக்கும் திருப்பத்தூர்..! தொழில் நிறைந்த ராணிப்பேட்டை..! புதிய மாவட்டங்களின் சிறப்புகள்

Published : Nov 28, 2019 6:15 PM

சந்தனம், ஜவ்வாது மணக்கும் திருப்பத்தூர்..! தொழில் நிறைந்த ராணிப்பேட்டை..! புதிய மாவட்டங்களின் சிறப்புகள்

Nov 28, 2019 6:15 PM

சந்தனம், ஜவ்வாது மணக்கும் மாவட்டமாக திருப்பத்தூர் மாவட்டம் உதயமாகியுள்ளது. தொழில் நிறைந்த மாவட்டமாக ராணிப்பேட்டை உருவெடுத்துள்ளது. 

வேலூர் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு புதிய மாவட்டமாக உருவாகியிருக்கும் திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகியவை நிர்வாக ரீதியில் பணிகளை தொடங்கி உள்ளன.

திருப்பத்தூர் பெரிய மலைகளால் சூழப்பட்டுள்ளது. சந்தனம், ஜவ்வாது மணக்கும் மாவட்டமாக திருப்பத்தூர் மாவட்டம் உதயமாகியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆன்மிக தலங்கள், சுற்றுலா தலங்கள் கணிசமாக உள்ளன. திருப்பத்தூர் மாவட்டத்தின் ஆம்பூர் பிரியாணி உலகப் புகழ்பெற்றது. இந்த வழியாக செல்வோர் தவறாமல் சாப்பிட்டு விட்டு செல்லும் அளவிற்கு சிறப்பு வாய்ந்தது.

இந்த மாவட்டத்தின் தலைநகரான திருப்பத்தூர் 17.98 சதுர கி.மீ பரப்பளவு கொண்டது. அதன் மக்கள்தொகை 11,11,812 ஆகும்.

திருப்பத்தூர் நகரம் ஜவ்வாதுமலை, ஏலகிரி மலை என 2 பெரிய மலைகளால் சூழப்பட்ட பகுதி. ஜவ்வாது மலை இயற்கை எழில் கொஞ்சும் அருவிகள் நீரோடைகள் காண்போரை மெய்சிலிர்க்க வைக்கிறது.

இதன் ஒரு பகுதி ஜலகம்பாறை நீர்வீழ்ச்சி அமிர்தி உயிரியல் பூங்காவும் சுற்றுலா தலங்களாக இயங்கி வருகிறது. வருவாய் நிர்வாகத்தை பொருத்தமட்டில் திருப்பத்தூர் மற்றும் வாணியம்பாடி என இரண்டு வருவாய்க் கோட்டங்களும், திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர் நாட்றாம்பள்ளி ஆகிய 4 வட்டங்களும் 15 உள்வட்டங்கள், உள்ளன.

திருப்பத்தூர், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை உள்ளிட்ட 4 நகராட்சிகளும், 7 ஊராட்சி ஒன்றியங்களும், ஆலங்காயம், நாட்றாம்பள்ளி மற்றும் உதயேந்திரம் என மூன்று பேரூராட்சிகளும் 207 கிராம ஊராட்சிகளும்,195 வருவாய் கிராமங்களும் உள்ளன.

இதே போல ராணிப்பேட்டை மாவட்டத்தில் ராணிப்பேட்டை, அரக்கோணம் என்ற இரு வருவாய் கோட்டங்களும், அரக்கோணம், வாலாஜா, நெமிலி, ஆர்காடு என்ற நான்கு தாலுகாக்களும், அரக்கோணம், ஆர்காடு, ராணிப்பேட்டை, சோளிங்கர் என்ற நான்கு சட்டமன்ற தொகுதிகளும் உள்ளன. 5 நகராட்சிகள், 9 பேரூராட்சிகள் உள்ளன.