​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கள்ளக்குறிச்சி அருகே சாலையோரம் கொட்டப்பட்ட மருத்துவக்கழிவுகள்

Published : Nov 28, 2019 4:19 PM

கள்ளக்குறிச்சி அருகே சாலையோரம் கொட்டப்பட்ட மருத்துவக்கழிவுகள்

Nov 28, 2019 4:19 PM

கள்ளக்குறிச்சி அருகே சாலையோரம் மருத்துவக் கழிவுகளை குவியலாக கொட்டி சென்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருக்கோவிலூர் புறவழிச்சாலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு ஐந்திற்கும் மேற்பட்ட இடங்களில் 10க்கும் மேற்பட்ட மூட்டைகளில் கொண்டுவரப்பட்ட மருத்துவக்கழிவுகள் குவியலாக கொட்டப்பட்டுள்ளன.

காலாவதியான மாத்திரைகள், ஊசிகள் மற்றும் கையுறைகள் கொட்டப்பட்டுள்ளதால் மழைநீரில் நனைந்து துர்நாற்றம் வீசுவதாக கூறப்படுகிறது.

இது குறித்து புகார் தெரிவித்த நிலையில், அங்கு விரைந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையில் இருந்தவற்றை ஓரமாக அப்புறப்படுத்தி விட்டு சென்றதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.