​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மோசமான தேசிய நெடுஞ்சாலை - 50% சுங்கவரி கட்டணத்தை மட்டும் ஏன் வசூலிக்கக்கூடாது - நீதிபதிகள் கேள்வி

Published : Nov 28, 2019 1:45 PM

மோசமான தேசிய நெடுஞ்சாலை - 50% சுங்கவரி கட்டணத்தை மட்டும் ஏன் வசூலிக்கக்கூடாது - நீதிபதிகள் கேள்வி

Nov 28, 2019 1:45 PM

மதுரவாயல் முதல் வாலாஜாபாத் வரை உள்ள தேசிய நெடுஞ்சாலையை முறையாக அமைக்கும் வரை ஐம்பது சதவீத சுங்க கட்டணத்தை மட்டும் ஏன் வசூலிக்க கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை மதுரவாயல் முதல் வேலூர் மாவட்டம் வாலாஜாபாத் வரை உள்ள தேசிய நெடுஞ்சாலை மிகவும் மோசமாக இருப்பதாக நீதிபதி சத்தியநராயணன் கடந்த 22ம் தேதி உயநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதன் அடிப்படையில் தேசிய நெடுஞ்சாலை தொடர்பான வழக்கை தாமாக முன்வந்து உயர்நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்து கொண்டது. இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், சாலை பராமரிப்பு தொடர்பாக மத்திய சாலை போக்குவரத்துத்துறை, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மற்றும் தமிழக நெடுஞ்சாலைத்துறை வரும் 9ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டனர்.