​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ரூ.10 லட்சம் கோடி சந்தை மதிப்பை எட்டிய முதல் இந்திய நிறுவனம்

Published : Nov 28, 2019 11:43 AM



ரூ.10 லட்சம் கோடி சந்தை மதிப்பை எட்டிய முதல் இந்திய நிறுவனம்

Nov 28, 2019 11:43 AM

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், 10 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பை எட்டிய முதல் இந்திய நிறுவனம் என்ற சாதனையை படைத்துள்ளது.

பங்குச்சந்தைகளில் இன்று காலை வர்த்தகத்தின்போது, அந்நிறுவன பங்குகளின் விலை 52 வாரங்களில் இல்லாத அளவுக்கு ஆயிரத்து 581 ரூபாயாக உயர்ந்தது. இதன் மூலம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சந்தை மூலதனமதிப்பு 10 லட்சம் கோடி ரூபாயை தாண்டியது.

இந்த சாதனையை செய்த முதல் இந்திய நிறுவனம் என்ற பெருமையை அந்நிறுவனம் பெற்றுள்ளது. கடந்த வாரத்தில் பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி, உலகின் மிகப்பெரிய எரிசக்தி நிறுவனங்கள் பட்டியலில் 6ஆவது இடத்தை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பிடித்தது.

இதன் மூலம், 59.4 பில்லியன் டாலர்கள் நிகர சொத்து மதிப்புடன் முகேஷ் அம்பானி உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 12ஆவது இடத்திற்கு முன்னேறியதும் குறிப்பிடத்தக்கது.