​​ தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி- தொடரையும் கைப்பற்றியது
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி- தொடரையும் கைப்பற்றியது

தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி- தொடரையும் கைப்பற்றியது

Feb 25, 2018 12:46 PM

தென்னாப்பிரிக்கவுக்கு எதிரான கடைசி 20 ஓவர் போட்டியில் வெற்றிப்பெற்ற இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட தொடரையும் கைப்பற்றியது.

கேப் டவுனில் நேற்று நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்தது. 

பின்னர் களமிறங்கிய தென்னாப்பிரிக்க வீரர்கள், இந்திய அணியின் அபார பந்து வீச்சால், விரைந்து ரன் சேர்க்க முடியாமல் தவித்தனர். கடைசி ஓவரில் 18 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில், அபாரமாக பந்து வீசிய புவனேஸ்வர் குமார், 11 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். 24 பந்துகளில் 49 ரன்கள் சேர்த்த தென்னாப்பிரிக்க வீரர் ஜான்கரின், அதிரடி வீணானது.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரை இந்திய அணி இரண்டிற்கு ஒன்று என்ற கணக்கில் கைப்பற்றியது.