​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இந்திய பொருளாதாரத்தில் இதுவரை மந்தநிலை இல்லை

Published : Nov 28, 2019 6:35 AM

இந்திய பொருளாதாரத்தில் இதுவரை மந்தநிலை இல்லை

Nov 28, 2019 6:35 AM

வளர்ச்சி வேண்டுமானால் குறைந்திருக்கலாம், ஆனால் இந்திய பொருளாதாரத்தில் இதுவரை மந்தநிலை இல்லை என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

பொருளாதார நிலைமையை மத்திய அரசு அறிந்திருப்பதாகவும், அதனை சீர்செய்ய துறை சார்ந்த முடிவுகளை எடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று இந்திய பொருளாதார நிலை பற்றிய விவாதத்துக்கு பதில் அளித்த அவர், இனி எப்போதும் பொருளாதார மந்த நிலை ஏற்படாது என்றார். காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் வங்கிகளால் வழங்கப்பட்ட மோசமான கடன்கள் மற்றும் திரும்ப செலுத்தப்படாத கடன்கள் ஆகியவற்றால் கடந்த 2 நிதி ஆண்டுகளாக உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் சரிந்துள்ளதாக குறிப்பிட்டார்.

பட்ஜெட்டுக்கு பிறகு பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க 32 நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்றும், பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையிலேயே இருக்கிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 2014-15ல் 7.4 சதவீதத்திலிருந்து 2015-16ல் 8 சதவீதமாகவும், 2016-17ல் 8.2 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது என்று நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.

மேலும் அக்டோபர் மாதத்திற்குள் 3.23 லட்சம் கோடி ஜிஸ்டி தொகை வசூலிக்கப்பட்டுள்ளது. இது நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் 49% ஆகும் என குறிப்பிட்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சி எம்.பி.க்கள், வெளிநடப்பு செய்தனர்.