​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பங்குச்சந்தைகள் புதிய உச்சத்துடன் நிறைவு

Published : Nov 27, 2019 4:48 PM

பங்குச்சந்தைகள் புதிய உச்சத்துடன் நிறைவு

Nov 27, 2019 4:48 PM

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் புதிய உச்சத்துடன் நிறைவடைந்திருக்கிறது.

இதேபோல், முன்னெப்போதும் இல்லாத வகையில், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டியும், புதிய உச்சத்துடன், இன்றைய வர்த்தகத்தை நிறைவு செய்திருக்கிறது. 41,002 புள்ளிகளுடன் இன்றைய வர்த்தகத்தை தொடங்கிய மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், 41 ஆயிரத்து 58 என்ற புதிய உச்சத்துடன் நிறைவடைந்தது.

இதேபோல், இன்று காலையில், 12,100 புள்ளிகளுடன் வர்த்தகத்தை எதிர்கொண்ட தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி, 12,110 புள்ளிகள் என்ற புதிய உச்சத்தை அடைந்து தனது வர்த்தகத்தை நிறைவு செய்தது.

இதற்கிடையே, அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, இன்று நன்றாக உயர்ந்திருக்கிறது. நேற்று டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 71 ரூபாய் 84 காசுகளாக இருந்த நிலையில், இன்று, 44 காசுகள் உயர்ந்து, 71 ரூபாய் 40 காசுகளாக அதிகரித்திருக்கிறது.