​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அயோத்தித் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு

Published : Nov 27, 2019 4:47 PM

அயோத்தித் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு

Nov 27, 2019 4:47 PM

அயோத்தி வழக்கின் தீர்ப்புக்கு எதிராக மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய உள்ளதாக அனைத்து இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம் அறிவித்துள்ளது.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்ட அனுமதி வழங்கிய உச்சநீதிமன்றம், முஸ்லீம்கள் மசூதி கட்ட ஐந்து ஏக்கர் நிலம் ஒதுக்க உத்தரவிட்டது.

இந்த தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனு செய்வது இல்லை என்று சன்னி வக்பு வாரியம் நேற்று அறிவித்தது. ஆனால் அயோத்தி தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தை மீண்டும் நாட உள்ளதாக அனைத்து இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியத்தின் செயலாளரும் வழக்கறிஞருமான ஜபர்யாப் ஜிலானி தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்றம் தங்களுக்கு வழங்கிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள இருப்பதாகவும், யார் மூலமாக இந்த வழக்கைத் தொடர்வது என்று ஆலோசித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் அயோத்தி வழக்கில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யக்கூடாது என்று சில மனுதாரர்களை அயோத்தி போலீஸ் மிரட்டி வருவதாகவும் ஜிலானி குற்றஞ்சாட்டியுள்ளார்.