​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
உணவு விடுதி மேலாளரைத் தாக்கிய காவல் உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட்

Published : Nov 27, 2019 4:05 PM

உணவு விடுதி மேலாளரைத் தாக்கிய காவல் உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட்

Nov 27, 2019 4:05 PM

டெல்லியில் உணவு விடுதி மேலாளருக்கு கைவிலங்கு மாட்டி தாக்குதல் நடத்திய காவல் உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

ஹஸ்ரத் நிஜாமுதீன் ரயில் நிலையம் அருகே உள்ள உணவு விடுதியின் மேலாளராக ஷிவம் துக்ரால் உள்ளார். அவருக்கு காவல் உதவி ஆய்வாளரான முகேஷ் ஃபோன் செய்தபோது, எடுக்காமல் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இதனால், ஆத்திரமடைந்த முகேஷ், அவரது உணவு விடுதிக்கு சென்று கைவிலங்கு மாட்டி கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது.

அவரது பாக்கெட்டில் இருந்த பணம் மற்றும் செல்ஃபோன் ஆகியவற்றை பறித்துக்கொண்டதாகவும் சொல்லப்படுகிறது. இதுதொடர்பாக வீடியோ பதிவை துக்ரால் வெளியிட்டதன் அடிப்படையில், முகேஷ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.