​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இந்திய பங்குச்சந்தைகளில் இன்றும் எழுச்சியுடன் வர்த்தகம்...

Published : Nov 27, 2019 10:39 AM

இந்திய பங்குச்சந்தைகளில் இன்றும் எழுச்சியுடன் வர்த்தகம்...

Nov 27, 2019 10:39 AM

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் நேற்று புதிய உச்சத்தை தொட்ட நிலையில், இன்றும், பெரியளவில் மாறுபாடின்றி 41,000 புள்ளிகளுக்கு குறையாமல், வர்த்தகத்தை தொடர்கிறது.

நேற்று 41,064 புள்ளிகளுடன் வர்த்தகத்தை ஆரம்பித்த நிலையில், இன்று காலையிலும், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 41,002 புள்ளிகளுடன் வர்த்தகத்தை தொடங்கியது.

இதேபோன்று, தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டியும், பெரியளவில் மாறுபாடின்றி, இன்றைய வர்த்தகத்தை எதிர்கொண்டிருக்கிறது. நேற்று 12,119 புள்ளிகளுடன் வர்த்தகத்தை ஆரம்பித்த தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி, இன்று காலை 20 புள்ளிகள் மட்டுமே குறைந்து, 12,099 புள்ளிகளுடன் வர்த்தகத்தை எதிர்கொண்டிருக்கிறது.

இதற்கிடையே, அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்திருக்கிறது. நேற்று டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 71 ரூபாய் 84 காசுகளாக இருந்த நிலையில், இன்று, 71 ரூபாய் 44 காசுகளாக அதிகரித்திருக்கிறது.