​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சென்ட்ரல் ரயில் நிலைய பகுதியில் பாதசாரிகள் சுரங்கபாதைகளை பயன்படுத்த போலீசார் நடவடிக்கை

Published : Nov 27, 2019 10:36 AM

சென்ட்ரல் ரயில் நிலைய பகுதியில் பாதசாரிகள் சுரங்கபாதைகளை பயன்படுத்த போலீசார் நடவடிக்கை

Nov 27, 2019 10:36 AM

சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய பகுதியில் சாலையை கடக்கும் பொதுமக்களை, சுரங்க நடைபாதை வழியாக செல்லுமாறு போலீசார் திருப்பி அனுப்புகின்றனர்.

பல்லவன்சாலை - பூந்தமல்லி நெடுஞ்சாலை எப்போதும் பரபரப்பாக இருக்க கூடியது. சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே இந்த சாலைலயை கடக்க மூன்று சுரங்கபாதைகள் இருப்பினும், மக்கள் அவற்றை பயன்படுத்தாததால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது.

மேலும் விபத்துகளும் ஏற்படுகின்றன. இதனால் சுரங்க பாதைகளை பயன்படுத்த வேண்டும் என காவல்துறை பலமுறை அறிவுறுத்தியும் பொதுமக்கள் அதனை பின்பற்றவில்லை.

இந்நிலையில் தற்போது சாலையை கடக்க முயல்பவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி, சுரங்க நடைபாதை வழியாக மட்டுமே சாலையை கடக்க வேண்டும் என திருப்பி அனுப்புகின்றனர். 2வது நாளாக போலீசார் இந்த பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.