​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தூத்துக்குடி மக்களவை தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்த அனுமதி

Published : Nov 26, 2019 6:33 PM

தூத்துக்குடி மக்களவை தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்த அனுமதி

Nov 26, 2019 6:33 PM

தூத்துக்குடி மக்களவை தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை விடுவிக்க தேர்தல் ஆணையத்திற்கு அனுமதியளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி மக்களவை தொகுதியில் போட்டியிட்ட கனிமொழியின் வெற்றியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகள் தொடரப்பட்டது. அதன் காரணமாக அந்த தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டன.

இந்நிலையில் கனிமொழி வெற்றிக்கு எதிரான வழக்குகளில் வாக்கு எண்ணிக்கை குறித்தோ, மின்னணு இயந்திரங்கள் குறித்தோ புகார் தெரிவிக்கப்படாததால் வேறு தேர்தல்களுக்கு பயன்படுத்தும் வகையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை விடுவிக்கக் கோரி தேர்தல் ஆணையம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை விடுவிக்க அனுமதியளித்து உத்தரவிட்டார்.