​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நாசவேலைக்கு திட்டமிட்ட பயங்கரவாதிகள் 3 பேர் கைது

Published : Nov 26, 2019 5:49 PM

நாசவேலைக்கு திட்டமிட்ட பயங்கரவாதிகள் 3 பேர் கைது

Nov 26, 2019 5:49 PM

ஐ.எஸ். ஆதரவு பயங்கரவாதிகள் வெடிகுண்டுகளுடன் பிடிபட்டதால் மிகப்பெரிய நாசவேலை தவிர்க்கப்பட்டு இருப்பதாக டெல்லி போலீஸ் துணை கமிஷனர் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய போலீஸ் துணை கமிஷனர் பிரமோத்சிங், டெல்லி மற்றும் அசாமில் ஐ.எஸ். ஆதரவு பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாக உளவுத்துறை ரகசிய தகவலை அனுப்பியது என்றார்.

இதையடுத்து டெல்லி, அசாம் போலீசார் நடத்தி வேட்டையில் கவுகாத்தியில் 3 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

முகாதீர் இஸ்லாம், ரஞ்சித் இஸ்லாம், ஜமீல்லூயிட் என்று மூவரும் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் ஆதரவாளர்கள் என்று அவர் கூறினார்.

கைதான பயங்கரவாதிகளின் வீடுகளில் இருந்து வெடிகுண்டுகள், ஒரு கிலோ வெடிபொருள் மற்றும் வெடிகுண்டு தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக பிரமோத்சிங் தெரிவித்தார்.