​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
26,882 பேர் எழுதிய முதுகலை கணினி பயிற்றுநர் தேர்வில் 1,758 பேர் மட்டுமே தேர்ச்சி

Published : Nov 26, 2019 4:22 PM

26,882 பேர் எழுதிய முதுகலை கணினி பயிற்றுநர் தேர்வில் 1,758 பேர் மட்டுமே தேர்ச்சி

Nov 26, 2019 4:22 PM

கடந்த ஜூன் மாதம் சுமார் 26,000 பேர் எழுதிய முதுகலை கணினி பயிற்றுநர்களுக்கான தேர்வில், சுமார் 1,700 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள 814 முதுகலை கணினி பயிற்றுநர் பணியிடங்களை நிரப்ப கடந்த ஜூன் 23 மற்றும் 27ஆம் தேதிகளில் ஆன்லைன் தேர்வு நடைபெற்றது. 26,882 பேர் எழுதிய ஆன்லைன் தேர்வு முடிவுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்டது.

இதில் 1,758 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. 150 மதிப்பெண்களுக்கு நடத்தப்பட்ட இத்தேர்வில், இரண்டு பேர் 106 மதிப்பெண்கள் எடுத்து முதலிடத்தை பகிர்ந்துகொண்டனர்.