​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ரிலையன்ஸ் நேவல் நிறுவன பங்குகளின் மதிப்பு செப்.9-க்குப் பிறகு 600 சதவீதம் உயர்ந்திருப்பதாக தகவல்

Published : Nov 26, 2019 4:05 PM



ரிலையன்ஸ் நேவல் நிறுவன பங்குகளின் மதிப்பு செப்.9-க்குப் பிறகு 600 சதவீதம் உயர்ந்திருப்பதாக தகவல்

Nov 26, 2019 4:05 PM

அனில் அம்பானியின் திவாலாகும் நிலையில் உள்ள "ரிலையன்ஸ் நேவல் அண்டு எஞ்சினியரிங்" ((Reliance Naval and Engineering)) நிறுவன பங்குகளின் மதிப்பு செப்டம்பர் 9ஆம் தேதிக்கு பிறகு 600 சதவீதம் அளவு உயர்ந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

95 பைசா என்ற அளவுக்கு சரிந்த அந்நிறுவனத்தின் பங்குகள் செப்டம்பர் 9ஆம் தேதிப் பிறகு 7 ரூபாய் 31 காசுகளாக உயர்ந்ததாகவும், அதன் பிறகு அந்நிறுவன பங்குகள் சரிவைச் சந்திக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

திவாலாகும் நிலையில், பல்வேறு பிரச்சனைகளில் உள்ள அந்நிறுவனத்தின் அடிப்படை நிலவரத்தில் பெரிதாக எந்த மாற்றமும் நிகழாதபோது, பங்குகளின் மதிப்பு மட்டும் சரியாமல் இருப்பது பங்குச்சந்தைகளில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஊக வணிகர்கள் திட்டமிட்டு அந்த பங்குகளின் மதிப்பை ஊதிப்பெருக்கி காட்டியிருக்க வாய்ப்புள்ளது என பங்குச்சந்தை வல்லுநர்கள் கூறுகின்றனர்.

செப்டம்பர் 9ஆம் தேதிக்குப் பிறகு பங்கு மதிப்பு 600 சதவீதம் அளவுக்கு உயர்ந்திருந்தாலும் ஆண்டு முழுவதையும் கணக்கில் எடுத்துக் கொண்டால் 50 சதவீதம் அளவுக்கு சரிந்திருப்பது குறிப்பிடத்தக்கது.