​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தஞ்சை இந்தியன் வங்கி கிளையில் சினிமா பாணியில் கொள்ளை முயற்சி.. மக்கள் அதிர்ச்சி

Published : Nov 26, 2019 1:53 PM



தஞ்சை இந்தியன் வங்கி கிளையில் சினிமா பாணியில் கொள்ளை முயற்சி.. மக்கள் அதிர்ச்சி

Nov 26, 2019 1:53 PM

தஞ்சையில் இந்தியன் வங்கி கிளை ஒன்றில் சினிமா பாணியில் நடைபெற்ற கொள்ளை முயற்சி தோல்வியில் முடிந்ததால் பல லட்ச ரூபாய் மதிப்பிலான நகைகள் தப்பின.

தஞ்சாவூர் - திருவையாறு செல்லும் வழியில் அம்மன்பேட்டை பகுதியில் இயங்கி வரும் இந்த வங்கியை காலை வழக்கம்போல் திறந்த காசாளர் ரகு, உள்ளே இருந்த நகைப்பெட்டக அறையின் கதவு சேதமடைந்திருந்ததைக் கண்டு போலீசாருக்குத் தகவல் கொடுத்தார்.

போலீசார் வந்து பார்த்தபோது, வங்கிக் கட்டிடத்தின் பக்கவாட்டு ஜன்னல் கம்பி வெல்டிங் மூலம் அகற்றப்பட்டு, உள்ளே திருட முயற்சிக்கப்பட்டுள்ளது. வங்கி உள்ளே சென்ற மர்ம நபர்கள் வங்கியினுள் இருந்த 6 சிசிடிவி கேமராக்களின் இணைப்புகளையும் துண்டித்துள்ளனர்.

பின் நகை, பணம் வைக்கப்பட்டுள்ள லாக்கர் உள்ள பகுதிக்கு சென்று அதனை உடைக்க கடும் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

ஆனால், எவ்வளவோ முயற்சி செய்தும் அவர்களால் லாக்கரை உடைக்க முடியவில்லை. இதையடுத்து கொள்ளையர்கள் ஏமாந்து திரும்பிச் சென்றனர். மேலும் சினிமா பாணியில் தடயங்களை மறைக்க மிளாகாய்ப் பொடியையும் தூவிச் சென்றுள்ளனர்.

மக்கள் மற்றும் வாகன நெரிசல் மிகுந்த பகுதியில் அமைந்துள்ள இந்தியன் வங்கி கிளையில் நடைபெற்றுள்ள கொள்ளை முயற்சி சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்