​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் இனி செவ்வாய்தோறும் பால் பிரசாதம்

Published : Nov 26, 2019 1:18 PM



திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் இனி செவ்வாய்தோறும் பால் பிரசாதம்

Nov 26, 2019 1:18 PM

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் செவ்வாய்கிழமை தோறும் சர்க்கரை பால் பிரசாதம் வழங்கும் திட்டம் துவங்கியது.

அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணியர் சுவாமி கோவிலுக்கு தமிழகம் மட்டுமல்லாது, பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.

இங்கு செவ்வாய்கிழமை தோறும் முருகப் பெருமானின் கையிலுள்ள தங்கவேலுக்கு அபிஷேகம் எனப்படும் திருமுழுக்கு நடைபெறுவது வழக்கம். ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்த கொண்டு வரும் பாலைக் கொண்டு இந்த திருமுழுக்கு நடைபெறும்.

அண்மையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இலவசமாக லட்டுப் பிரசாதம் வழங்கும் திட்டம் நடைமுறைக்கு வந்தது. அந்த வகையில் இங்கு திருமுழுக்கு செய்யப்படும் சர்க்கரை கலந்த பாலை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்க கோவில் நிர்வாகம் முடிவு செய்தது.

அதன்படி இந்து அறநிலையத்துறை ஆணையரின் அனுமதியோடு, இன்று முதல் திட்டம் நடைமுறைக்கு வந்தது. இந்த புதிய முறை கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.