​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு என்பதே அரசின் நிலைப்பாடு - அமைச்சர் செங்கோட்டையன்

Published : Nov 25, 2019 7:45 PM

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு என்பதே அரசின் நிலைப்பாடு - அமைச்சர் செங்கோட்டையன்

Nov 25, 2019 7:45 PM

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்பதுதான், தமிழக அரசின் நிலைப்பாடு என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் நம்பியூரில் புதிதாக கட்டப்படவுள்ள வட்டார ஒருங்கிணைந்த வேளாண் மையக் கட்டிடம் உள்ளிட்ட பணிகளை அவர் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

இதையடுத்து கீழ்பவானிவாய்கால் உடைப்பின்போது சிறப்பாக செயல்பட்ட காவல்துறையினருக்கு சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.

விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திகணேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்பதுதான், தமிழக அரசின் நிலைப்பாடு என்றார்.