​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கடும் அமளி - 2 எம்.பிக்கள் சஸ்பெண்ட்

Published : Nov 25, 2019 5:45 PM



நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கடும் அமளி - 2 எம்.பிக்கள் சஸ்பெண்ட்

Nov 25, 2019 5:45 PM

நாடாளுமன்றத்தில் மகாராஷ்ட்ர விவகாரம் தொடர்பாக கூச்சல் குழப்பம் ஏற்படுத்தி கடும் அமளியில் ஈடுபட்டதாக காங்கிரஸ் எம்.பிக்கள் 2 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

காலையில் மக்களவை கூடிய போது, மகாராஷ்ட்ராவில் பாஜக முறைகேடாக ஆட்சி அமைத்ததாக கூறி, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் முழக்கமிட்டனர்.

“ஜனநாயகத்தை காப்பாற்றவேண்டும்” என்பது உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய அட்டைகளை கைகளில் ஏந்தியும் கடும் எதிர்ப்பு முழங்கங்களை எழுப்பினர். இதனால் அவை அலுவல்கள் பாதிக்கப்பட்டன.

இந்த நிலையில் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்படுத்தியதாக கூறி, கேரள மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்பிக்களான, ஹிபி ஏடன் மற்றும் டி.என். பிரதாபன் ஆகியோரை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.