​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
படிப்பை முடிக்கும் முன்பே பன்னாட்டு நிறுவனங்களில் வேலை - சென்னை ஐஐடி அறிவிப்பு

Published : Nov 25, 2019 5:42 PM

படிப்பை முடிக்கும் முன்பே பன்னாட்டு நிறுவனங்களில் வேலை - சென்னை ஐஐடி அறிவிப்பு

Nov 25, 2019 5:42 PM

சென்னை ஐஐடி மாணவர்கள் 158 பேருக்கு அவர்களது படிப்பை முடிக்கும் முன்பே வேலைக்கான அழைப்புக்கடிதம் வந்துள்ளதாக ஐஐடி நிர்வாகம் அறிவித்துள்ளது.

Qualcomm, Intel land, Samsung Research போன்ற பன்னாட்டு நிறுவனங்களில், மாணவர்கள் 158 பேருக்கு Internship மூலம் வேலை கிடைத்துள்ளது. இந்த மாணவர்கள் 2020-ம் ஆண்டு மே மாதத்தில் தங்களது படிப்பை முழுமையாக நிறைவு செய்த பின், வேலையில் சேர்ந்துகொள்ளலாம் என்று ஐஐடி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டுகளைக் காட்டிலும், இந்த ஆண்டு அதிக அளவில்  மாணவர்களுக்கு, படிப்பு முடிவதற்கு முன்பே வேலை கிடைத்துள்ளதாக சென்னை ஐஐடி அறிவித்துள்ளது.