​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தாராசுரம் ஐராவதீஸ்வரர் ஆலயத்தில் குளம் போல் தேங்கி அசுத்தமடைந்துள்ள மழை நீர்

Published : Nov 25, 2019 5:13 PM



தாராசுரம் ஐராவதீஸ்வரர் ஆலயத்தில் குளம் போல் தேங்கி அசுத்தமடைந்துள்ள மழை நீர்

Nov 25, 2019 5:13 PM

பிரசித்தி பெற்ற கும்பகோணம் தாராசுரம் ஐராவதீஸ்வரர் ஆலயத்தில் குளம் போல் தேங்கி அசுத்தமடைந்துள்ள மழை நீரால் சுற்றுலாப்பயணிகள் முகம் சுளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

image

பண்டைய கட்டடக்கலைக்கு புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலைப் போன்று, தாராசுரம் ஐராவதீஸ்வரர் ஆலயமும், உலக பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ அமைப்பால் அறிவிக்கப்பட்டு மத்திய அரசின் தொல்லியல் துறை பராமரித்து வருகிறது. இங்குள்ள சிற்ப அழகை ரசிக்க உள்நாட்டில் இருந்தும் வெளி நாடுகளில் இருந்தும், சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.

image

சமீபத்தில் பெய்த மழையால், ஆலயத்தின் வெளிப் பிரகாரம், முன் மண்டபம், பெரியநாயகி அம்பாள் சன்னதி உள்ளிட்ட பகுதிகளில் நீர் தேங்கி பாசி பிடித்து துர் நாற்றம் வீசுவதால், தொல்லியல் துறை நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சுற்றுலாப் பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.