​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இந்தியாவில் 22 சதவீத நிலத்தடி நீர்மட்டம் பாதிப்பு..!

Published : Nov 25, 2019 3:49 PM

இந்தியாவில் 22 சதவீத நிலத்தடி நீர்மட்டம் பாதிப்பு..!

Nov 25, 2019 3:49 PM

இந்தியாவில் 22 சதவீதம் அளவுக்கு நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டு, வறண்டு காணப்படுவதாக ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத் தெரிவித்துள்ளார்.

இந்திய நிலத்தடி நீர்வள ஆதார மையம் இது தொடர்பான புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது. அதில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் சுமார் 22 சதவீதம் அளவிற்கு நிலத்தடி நீர்மட்டம் முற்றிலும் வறண்டு விட்டது அல்லது மிகவும் கீழே இறங்கிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக தமிழ்நாட்டில் 541 பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் ஆபத்தான நிலையில் அதிக ஆழத்திற்குச் சென்றுவிட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்நிலையில் ஒட்டு மொத்தமாக வேளாண்துறையில் 10% அளவிற்கு தண்ணீரை சேமிப்பதன் மூலம் நாட்டில் அடுத்த 50 ஆண்டுகளுக்கு நீர் பற்றாக்குறையை குறைக்க முடியும் என அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் கூறியுள்ளார்.

விவசாயத்திற்கு 89 சதவீத தண்ணீர் பயன்படுத்தப்படுவதாகவும், விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, நீர்த்தெளிப்பானை பயன்படுத்த ஊக்கமளித்தால், நிலத்தடி நீர்மட்டத்தை பாதுகாக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.