​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆசிரியர் மிரட்டியதால் பள்ளி மாணவி தற்கொலை விவகாரம் : பள்ளி ஆசிரியர்களிடம் விசாரணை

Published : Nov 25, 2019 1:46 PM

ஆசிரியர் மிரட்டியதால் பள்ளி மாணவி தற்கொலை விவகாரம் : பள்ளி ஆசிரியர்களிடம் விசாரணை

Nov 25, 2019 1:46 PM

தூத்துக்குடியில் ஆசிரியர் மிரட்டியதால் பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக, பள்ளி ஆசிரியர்களிடம் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி விசாரணை மேற்கொண்டார்.

தூத்துக்குடி விவிடி மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்த மரிய ஐஸ்வர்யா என்ற மாணவியை, விடுப்பு எடுத்தற்கு தண்டனையாக கணினி ஆசிரியர் ஞானபிரகாசம் என்பவர் 150 தோப்புகரணம் போட சொன்னதாகவும், மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த மாணவி கடந்த 23ஆம் தேதி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. தலைமையாசிரியர் கனகரத்தினமணி கைது செய்யப்பட்ட நிலையில், ஆசிரியர் ஞானபிரகாசம் தலைமறைவாக இருந்துவருகிறார்.

இந்த நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஞானகௌரி பள்ளிக்கு நேரில் சென்று ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தினார். பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதுடன் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.