​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நீர்நிலைகளுக்கு குறைவான எண்ணிக்கையில் வந்துள்ள வெளிநாட்டு பறவைகள்

Published : Nov 24, 2019 4:24 PM

நீர்நிலைகளுக்கு குறைவான எண்ணிக்கையில் வந்துள்ள வெளிநாட்டு பறவைகள்

Nov 24, 2019 4:24 PM

கன்னியாகுமரி மாவட்ட நீர்நிலைகளுக்கு குறைவான எண்ணிக்கையிலேயே வெளிநாட்டு பறவைகள் வந்திருப்பது பறவை ஆர்வலர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதிக எண்ணிக்கையிலான நீர்நிலைகள் மற்றும் இதமான பருவநிலையால் ஈர்க்கப்பட்டு செப்டம்பர் முதல் பிப்ரவரி வரை  சான்ட் பைபர் ,  பிளமிங்கோ, காஸ்பியன் டேர்ன் உள்ளிட்ட பறவைகள் ஆஸ்திரேலியா, நியுசிலாந்து  உள்ளிட்ட நாடுகளிலிருந்து கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வருவது வாடிக்கையாகும்.

ஆனால் இந்த ஆண்டு குறைவான எண்ணிக்கையிலேயே வெளிநாட்டு பறவைகள் வந்துள்ளன. பாதுகாக்கப்பட்ட பறவைகள் பகுதியை பராமரிக்க  தவறியதும், நீர்நிலைகளில் வளர்க்கப்படும் மீன்களை தின்பதை தடுக்க பறவைகளை பட்டாசு வெடித்து விரட்டுவது உள்ளிட்டவையும் இதற்கு காரணமாக கூறப்படுகிறது.