​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வாடகைத்தாய் கட்டுப்பாடு மசோதா குறித்து ஆய்வு செய்ய குழு

Published : Nov 24, 2019 9:13 AM

வாடகைத்தாய் கட்டுப்பாடு மசோதா குறித்து ஆய்வு செய்ய குழு

Nov 24, 2019 9:13 AM

வாடகைத்தாய் கட்டுப்பாடு மசோதா குறித்து ஆய்வு செய்திட 23 பேர் அடங்கிய தேர்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களவையில், இப்பிரச்சினை குறித்து பேசிய மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், மாநிலங்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வைத்த கோரிக்கையை ஏற்றுக் கொண்டு, வாடகைத்தாய் முறையை ஒழுங்குபடுத்துதல் மசோதாவை ((The Surrogacy (Regulation) Bill)) நிறைவேற்றுவதற்கு குழு அமைக்கப்படுவதாகத் தெரிவித்தார்.

தி.மு.க. உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி, எம்.பி. உள்ளிட்டோர் அடங்கிய 23 மாநிலங்களவை உறுப்பினர்கள் அடங்கிய தேர்வுக் குழு ((Selection Committee)) அடுத்த கூட்டத்தொடரின்போது, முதல் வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்திட வேண்டுமென தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானம் மாநிலங்களவையில் ஒருமனதாக நிறைவேற்றியது.